அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ் இஸ்லாமிய சமுதாயம் (தமுழ்),
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பேரருளால்.
உலகெங்கிலும் உள்ள இஸ்லாமிய தமிழ் மக்களுக்கு ஒரு நற்செய்தி, உலக இஸ்லாமியத் தமிழர் அமைப்பு மற்றும் நிறுவனம் ஒன்று அன்மையில் இனிதே மலர்ந்திருக்கிறது, அல்ஹம்துலில்லாஹ். வல்ல அல்லாஹ்வின் பேரருளால் இஸ்லாமிய தமிழர்களின் முன்னேற்றம் கருதி, இறைத் தூதரின் போதனைகளுக்கு செயல் வடிவம் கொடுத்து முன்மாதிரியாகச் செயல் பட உள்ள சிறப்பு மிக்க, ஓர் இஸ்லாமிய அமைப்பு உலகெங்கிலும் வாழும் தமிழ் முஸ்லிம்களுக்குத் தொண்டு செய்ய, இறைஅருளால் இந்த அமைப்பை உருவாக்கித் தலைமை ஏற்று மூத்த, அறிவார்ந்த, ஆற்றல் மிக்க தலைவர்களுடன் ஒரு குழுவாகச் சேர்ந்து செயல்பட திட்டமிட்டிருக்கிறோம். பல்வேறு நிலைகளில் தொலைநோக்கோடும் சீரிய குறிக்கோளுடன் சிறப்பான செயல் திட்டத்தோடும் உலகெங்கிலும் உள்ள தமிழ் இஸ்லாமிய சமுதாயத்திற்குத் தொண்டாற்ற தங்களை அன்புடன் அழைக்கிறோம்.
மேற்கூறிய குறிக்கோளுடன் அல்லாஹ்வின் நாட்டப்படி எங்கள் செயல் தலைவர்கள் குழு, உலகெங்கிலும் வாழும் தமிழ் முஸ்லிம்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் உயரிய நோக்கோடு செயல் திட்டம் தீட்டி அதைத் தங்களோடு பகிர்ந்து கொள்ள உள்ளனர்.
தொலைநோக்கு பார்வை
உலகெங்கிலும் வாழும் தமிழ் முஸ்லிம்கள் அனைவரையும் ஒன்றினைத்து அவர்களின் முன்னேற்றத்திற்குப் பாடுபடும் ஒப்பவமையற்ற, எளிய, ஆற்றல் மிக்க ஒரு நிறுவனமாகச் செயல்படுவது.
பணி
தமிழ் முஸ்லிம்களின் முன்னேற்றத்தோடு மத நல்லிணக்கத்தை வளர்க்கவும் இஸ்லாமியர்களுக்கு இடையே உறவை வலுப்படுத்தவும், இஸ்லாம் சமுதாயத்திற்கு வழங்கியுள்ள நற்கொடைகளை முழுமையாகப் புரிந்து, உணர்ந்து செயல்பட வைப்பதும் ஆகும்.
செயல் திட்டங்களும், குறிக்கோளும்
- உலகெங்கிலும் உள்ள இஸ்லாமிய தமிழ்ச் சமுதாயத்தை (தமுழ்) வலுப்படுத்துவதும் முன்னேற்றுவதும்.
- நிறுவன வளர்ச்சி, செயல் திறன், செயல் முறையில் தெளிவான வெளிப்பாடு, பொறுப்பு ஏற்றல், சிறப்பான செயல்பாடு, சீரிய கருத்துப் பரிமாற்றம், நீண்டகால மற்றும் குறுகிய கால நிதி ஸ்திரத்தன்மை.
- மத நல்லிணக்கத்தை வளர்த்தல் மற்றும் பல்வேறு நாடுகளில் முஸ்லிம் மக்களிடையே நல்லுறவை வளர்த்தல்.
- உலகெங்கிலும் வாழும் இஸ்லாமியத் தமிழர்களிடையே (தமுழ்) பகிர்வு மனநிலையை வளர்த்தல்.
தமுழ் வேண்டுகோள்
- தன்னார்வத் தொண்டு புரிதல்.
- அமைப்பு, நிதி மற்றும் தரும காரியங்களுக்கு உதவுதல்.
- தமுழ் நிறுவனத்தில் அங்கத்தினராதல், உறுப்பினர் கட்டணம் செலுத்துதல், தலைமை மற்றும் செயல் தலைவர்களைத் தேர்வு செய்தல்.
- தமுழ் நிறுவனத்தின் அனைத்துச் செயல்களிலும் பங்கேற்றுப் பணியாற்றி நிறுவனத்தின் முன்னேற்றத்திற்கு உதவுதல்.
- தமுழ் மாநாடு மற்றும் அமைப்பு நடத்தும் சிறு கூட்டங்களிலும் பங்கேற்றுப் பயன் அடைதல்.
- எமது பணிவான வேண்டும்கோள், உலகெங்கிலும் உள்ள தமிழ் இஸ்லாமியச் சகோதர சகோதரிகள் இம்முன்னேற்றப் பாதையில் எங்களோடு பயணித்துப் பயன் பெற மிக்க அன்புடன் அழைக்கிறோம்.
மன்சூர் முகம்மது சாலிஹு, நிறுவனர், தமுழ்/TaMul - TamilMuslims.org®
ஜஸாக் அல்லாஹ் கைரன்